ADDED : ஏப் 03, 2026 07:50 PM

திருப்பூர்:கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடந்த, 40 நாட்களாக தவக்காலம் அனுசரித்தனர். அதன் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி, நேற்று அனுசரிக்கப்பட்டது. ஏசு, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை நினைவுகூரும் வகையில், அவரது சிலுவைப்பாடுகள் தியானிக்கப்பட்டன.
திருப்பூர் புனித ஜோசப் சர்ச், கத்ரீனம்மாள் சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க சர்ச்சகளிலும், நேற்று காலை, 6:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, ஏசு உயிர் நீத்தததை நினைவு கூறும் வகையில், சிலுவைப்பாதை ஆராதனனயும், தொடர்ந்து, திருச்சிலுவை ஆராதனையும் நடத்தப்பட்டதுதிருப்பூர், சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி, அருள்புரம் சர்ச், அவிநாசி ரோட்டில் உள்ள புனித பவுல் சர்ச், அவிநாசியில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் சர்ச் உள்ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. சர்ச்களிலும், காலை, 11:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது.நேற்று காலை முதல் மாலை வரை உண்ணா நோன்பிருந்து ஆராதனை, வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்ககேற்றனர். சிலுவையில் அறையுண்ட ஏசு, 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, சர்ச்களில் ஈஸ்டர் பெருநாள் திருப்பலி நடத்தப்படும்; நாளை, காலையும் திருப்பலி, ஆராதனை நடத்தப்படும்.
---
2 படங்கள்
திருப்பூர், குமரன் ரோடு, புனித கத்ரீனம்மாள் சர்ச்சில், சிலுவைப்பாதை ஆராதனை நேற்று நடந்தது. அவிநாசி, சி.எஸ்.ஐ. இம்மானுவேல் சர்ச்சில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
