/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாலில் கலப்படம் நடவடிக்கை தேவை'
/
'பாலில் கலப்படம் நடவடிக்கை தேவை'
ADDED : டிச 05, 2024 05:59 AM
திருப்பூர்; திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலருக்கு உதவியாளர் அவசியம். அப்பதவியை மாநில உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஒப்புதலுடன் ஒப்பந்த அல்லது நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும்.
அப்போதுதான், உணவு பாதுகாப்பு சார்ந்த பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும். அலுவலர் பற்றாக்குறை இருப்பினும், திருப்பூர் மாவட்ட நியமன அலுவலரின் செயல்பாடு திருப்தியளிப்பதாக இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மினரல் வாட்டர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது போன்று, பால் விற்பனை செய்வோரையும் கட்டுப்படுத்த வேண்டும். சில பால் வியாபாரிகள், மனசாட்சிக்கு விரோதமாக துணிந்து கலப்படம் செய்கின்றனர். பால் வியாபாரிகள் பலர், உரிமம் பெறாமல் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்திலும் உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.