/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால் குட ஊர்வலம்; பக்தர்கள் பரவசம்
/
பால் குட ஊர்வலம்; பக்தர்கள் பரவசம்
ADDED : மே 05, 2025 05:09 AM

திருப்பூர்; வாலிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா, ஏப்., 27ல், பொட்டுசாமி பொங்கலுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.
நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் சடையப்பன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துச்சென்று மாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. அம்மன், வாராஹி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
இன்று மாலை, 6:00 மணிக்கு, டவுன்ஹால் அருகே செல்வ விநாயகர் கோவிலில் இருந்து கும்பம் அழைத்தல், முளைப்பாரி எடுத்துவரப்படுகிறது. நாளை மாலை, டி.எஸ்., புரம் விநாயகர் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல், சீர்தட்டு எடுத்துவரப்படுகிறது.
வரும் 7ம் தேதி, மாலை, சடையப்பன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்துவருதல்; 8ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 9ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மஹா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது.
அன்று மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா வருகிறார்.