ADDED : ஆக 30, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த லிட்டருக்கு ரூ.1 கொள்முதல் விலை, ரூ.2 ஊக்கத்தொகை உயர்வு போதாது; இடுபொருள் விலை உயர்ந்துள்ளதால் கொள்முதல் விலை ரூ.10, ஊக்கத்தொகை ரூ.10 என உயர்த்தக்கோரி, ஊத்துக்குளி புஞ்சை தளவாய்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் கொளந்தசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முனுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பால் கேன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
–––
பால் கேன்களுடன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பால் உற்பத்தியாளர்கள்.
