/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மன வளக்கலை பயிற்சி நல்வழிப்படுத்தும் கலை'
/
'மன வளக்கலை பயிற்சி நல்வழிப்படுத்தும் கலை'
ADDED : மே 05, 2025 05:12 AM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் ஐம்பெரும் விழா நடந்தது.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை திறந்துவைத்து பேசியதாவது: மனவளக்கலை பயிலாமல், இறை தத்துவம் விளங்காது. மனம் எப்படியோ, அப்படித்தான் மனிதன் இருப்பான். நம்மை எண்ணங்கள் தான் வழிநடத்துகின்றன.
சிறப்புகளுடைய மனதை, நெறிப்படுத்தி, பக்குவப்படுத்தி, துாய்மைப்படுத்தவில்லையென்றால், ஆன்மீகம் என்ற பேச்சுக்கு இடம் கிடையாது. நம் மனம், ஞானம், தத்துவத்தை கொடுக்கிறது.
மனதை கவனிக்காமல், மனம் போன போக்கில் செயல்படக்கூடாது. இன்றைய பிரதானப் பிரச்னை, மனம் போன போக்கில் இருப்பது மனதை துாய்மைப்படுத்த, மனவளக்கலை பயிற்சி சிறந்தது.
நம்மை நல்வழிப்படுத்தி, ஞானத்தை போதிக்கும். இவ்வாறு, அவர் பேசினார். இரண்டாம் தளத்தை துணை தலைவர் ஆறுமுகம் திறந்து வைத்தார். ஏ.சி., ஹாலை, துணை தலைவர் சுந்தரராஜ், லிப்ட்டை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் திறந்து வைத்தனர்.
அறிவுத்திருக்கோவில் திருப்பூர் மண்டல தலைவர் கருணாநிதி, விரிவாக்க செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். திருப்பூர்அக் ஷயா டிரஸ்ட் துணை தலைவர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.