தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குறுமையத் தடகளம் போட்டிகள் நிறைவு

குறுமையத் தடகளம் போட்டிகள் நிறைவு

குறுமையத் தடகளம் போட்டிகள் நிறைவு


UPDATED : அக் 09, 2026 10:01 PM

ADDED : அக் 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 10:01 PM ADDED : அக் 09, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு குறுமைய தடகளப் போட்டிகள், சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நேற்று நடந்தன.

அக். 8ம் தேதி தொடங்கிய போட்டிகளின் இரண்டாம் நாளில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். எம்.என். முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார்.

நேற்றைய போட்டிகளில், 41 பள்ளிகளைச் சேர்ந்த 638 மாணவர்கள், 493 மாணவியர் என மொத்தம் 1,131 பேர் பங்கேற்றனர். 1,500 மீ., 400 மீ., 4x400 மீ. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கோலுான்றித் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழாசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.

2 காலம்

திருப்பூர், எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் தெற்கு குறுமைய தடகளப் போட்டிகள் நடந்தன. நேற்று கோலுான்றி தாண்டுதல் போட்டியில் திறமை காட்டிய வீரர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us