/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மினி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மினி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 24, 2025 12:45 AM
திருப்பூர்; 'அனைத்து நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, மினி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 14 வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டும், 4 முற்றிலும் புதிய வழித்தடங்களுடன், 18 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; அந்த வழித்தடங்களில், கடந்த 17ம் தேதி முதல் மினி பஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
மினி பஸ் உரிமையாளர் கிருஷ்ணசாமி மற்றும் சிலர், மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில், 'அரசு விதிகளை மீறி, திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, நீட்டிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். தவறாக வழங்கப்பட்ட நீட்டிப்பு வழித்தடங்களை ரத்து செய்ய வேண்டும்.
வெளிப்படை தன்மையுடன் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களுக்கான, வழித்தட வரைபடத்தை வழங்க வேண்டும்' என கூறியிருந்தனர்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, 8:30 மணிக்கு, ஆர்.டி.ஓ.,விடம் பேச்சு நடத்தினர்.