/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முன்னிலை 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமிதம்
/
உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முன்னிலை 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமிதம்
உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முன்னிலை 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமிதம்
உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முன்னிலை 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமிதம்
ADDED : மே 14, 2025 11:16 PM

திருப்பூர், ;திருப்பூரில் நடந்த 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில், உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக, அமைச்சர் கயல்விழி பேசினார்.
பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு வழிகாட்டும், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நேற்று, ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர், 'கல்லுாரி கனவு' வழிகாட்டி கையேட்டை மாணவர்களுக்கு வழங்கினர்.
அமைச்சர் கயல்விழி பேசியதாவது:
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் கல்லுாரியில் சேர்ந்து, உயர்கல்வியை தொடர வேண்டும். நாட்டிலேயே, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, உயர்கல்வி பயில்வதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
'நான் முதல்வன்' திட்டம், பள்ளிக்கல்விக்கு பிறகு அனைவரும் உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
மாணவ, மாணவியர், உயர்கல்வியின் போதே, தங்களது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை சென்றடைய, கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
துறைசார் வல்லுனர்களை கொண்டு, மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லுாரி கண்காட்சி
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், கல்லுாரி பாடங்களை தேர்வு செய்ய ஏதுவாக, கல்லுாரிகள் சார்பில், கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர், புதிய பாடத்திட்டங்கள், கல்லுாரியின் சிறப்பு, எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து, கல்லுாரிகள் அமைத்திருந்த கண்காட்சியில் நேற்று ஆர்வமுடன் விசாரித்தனர்.