/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்
/
திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்
திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்
திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்
ADDED : பிப் 10, 2024 11:50 PM

திருப்பூர்:திருப்பூரில் நடை மேம்பாலங்களில் விதிமுறை மீறி, அமைச்சர் உதயநிதியை வரவேற்று தி.மு.க.,வினர் பிளக்ஸ் பேனர்களை கட்டியுள்ளனர். இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.
திருப்பூரில் புஷ்பா சந்திப்பு, பார்க் ரோடு, டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன், நல்லுார் போன்ற இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. முறையாக பராமரிப்பு, கண்காணிப்பு செய்யப்படாத நிலையில், 'குடி'மகன்கள் மது அருந்துவது, போதையில் துாங்குவது, சில சட்டவிரோத செயல்களும் அரங்கேறி வந்தது. நடைமேம்பாலத்தின் இருபுறங்களில் விளம்பர பிளக்ஸ் பேனர்களும் கட்டப்பட்டன. இதனால், இதை மக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.
சமீபத்தில், பார்க் ரோட்டில் உள்ள நடைமேம்பாலத்தில், ரோட்டோரம் வசித்து வந்த, 35 வயது பெண்ணை, இருவர் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்கினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, நடைமேம்பாலத்தில் இருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. நான்காவது குடிநீர் திட்டம் துவக்க விழாவுக்காக அமைச்சர் உதயநிதி இன்று திருப்பூர் வருகிறார். இதையொட்டி, ஆளும்கட்சி சார்பில், அனைத்து நடைமேம்பாலங்கள் மீதும் விளம்பர பிளக்ஸ் பேனர்களை கட்டியுள்ளனர். முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆளும் கட்சியினரே, ஒரு புறம் மாநகராட்சியின் எச்சரிக்கை பலகை இருக்க, மறுபுறம் விளம்பர பிளக்ஸ் கட்டியுள்ளனரே என போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வசைபாடி வருகின்றனர்.