/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி திட்ட பணி அமைச்சர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணி அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 11, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காங்கயம் ஒன்றியத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 151 பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களில் பணிகள் நடக்கின்றன. படியூர் ஊராட்சி இந்திரா நகரில், தேசிய வேலை உறுதி திட்டத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும்
அங்கன்வாடி மையம் கட்டுமான பணி; திறந்தவெளி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, ஆழ்துளை கிணறு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கயல்விழி, செயற்பொறியாளர் மோகனசுந்தரம், காங்கயம் பி.டி.ஓ.,க்கள் விமலாவதி, அனுராதா உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.