/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கானல் நீரான சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் அலங்கோலம்
/
கானல் நீரான சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் அலங்கோலம்
கானல் நீரான சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் அலங்கோலம்
கானல் நீரான சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அதிகாரிகள் அலட்சியத்தால் அலங்கோலம்
ADDED : ஏப் 23, 2025 10:53 PM
உடுமலையிலிருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழித்தடத்தில், அமராவதி சுற்றுலா மையம் உள்ளது. அமராவதி அணை மற்றும் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்கா, வனத்துறை சார்பில் முதலை பண்ணை, இயற்கை சூழல் அங்காடி, மூங்கில் பண்ணை, பாளை பூங்கா, கள்ளி பூங்கா மற்றும் படகு சவாரி என அருமையான சுற்றுலா மையமாக உள்ளது.
இங்கு, ஆண்டுக்கு, 3 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பூங்கா பராமரிப்பு குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அழகாக இருந்த பூங்கா தற்போது புதர் மண்டியும், முட்காடுகளாகவும் அலங்கோலமாக மாறியுள்ளது.
திருமூர்த்திமலை
மேற்கு தொடர்ச்சி மலையில், திருமூர்த்திமலைமேல், 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி, அதற்கு மேல் பஞ்ச லிங்கம் கோவில், மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளிய அமணலிங்கேஸ்வரர் கோவில் என ஆன்மிக சுற்றுலா மையமாக உள்ளது.
இங்கு, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் உள்ளது. சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், அணைக்கரையில் பூங்கா, சிறுவர் விளையாட்டு மையம், தீம் பார்க் அமைக்கும் அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை.
மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில், செயல்படுத்தப்பட்ட படகு சவாரி, அதிகாரிகள் அலட்சியத்தால், 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
வனத்துறை சார்பில், துவங்கப்பட்ட சூழல் சுற்றுலா திட்டம், டிரக்கிங், மர வீடு, காட்சி மாடம், கூட்டாறு பகுதியில் பரிசல் பயணம் போன்றவை, துவங்கிய ஒரு சில மாதங்களிலேயே முடங்கியுள்ளது.
நிதி வந்ததும் பணி
சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அமராவதி, திருமூர்த்தி சுற்றுலா மையங்களை மேம்படுத்த, அரசு துறைகள் இணைந்து, பல முறை கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பியும், நிதி ஒதுக்கவில்லை. சுற்றுலாத்துறை அமைச்சரும் நேரில் ஆய்வு செய்து, விரைவில் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நிதி வந்ததும், பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

