/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான ஒடிசா பெண்கள் ஆறு ஆண்டுக்கு பின் மீட்பு
/
மாயமான ஒடிசா பெண்கள் ஆறு ஆண்டுக்கு பின் மீட்பு
ADDED : நவ 22, 2024 02:14 AM
திருப்பூர்:ஒடிசா மாநிலம், பாலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மாயமானது தொடர்பாக பெற்றோர், 2018ம் ஆண்டில் அம்மாநில போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மாயமான பெண்கள் திருப்பூர் மாநகரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்வது தெரிந்தது. ஒடிசாவை சேர்ந்த, 15 பேர் கொண்ட தனிப்படை போலீசார், கடந்த ஒரு வாரமாக திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்களில் விசாரித்தனர். அப்போது, பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்த, ஆறு இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஆறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள் அனைவரும், இத்தனை ஆண்டுகளாக திருப்பூரில் தான் இருந்தனர். சிலர் காதல் வயப்பட்டு காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வசித்து வருவது தெரிந்தது. இன்னும், நான்கைந்து பேரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.