ADDED : ஜூன் 27, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லூர்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சிபுரம் இரண்டு வீதிகளில், குடிநீர் இணைப்பில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதியினர் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பல மாதங்களாக அவ்வப்போது, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நுரையாக வருகிறது.பயன்படுத்த முடியவில்லை. வீட்டு தேவைக்கு குடிநீர் விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.
குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் கலப்பதால், இந்த பிரச்னை ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.