ADDED : மே 20, 2026 01:12 AM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்: திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
திருப்பூர், அவிநாசி ரோடு, வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிந்து, வெற்றி பெற்ற சத்யபாமா எம்.எல்.ஏ அலுவலகம் வருவதால், நீண்ட நாட்களாக பூட்டி இருந்த அலுவலகத்தை பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வர்ணம் தீட்டுதல், அடித்தல், மராமத்து பணிகள் செய்தல், மின் சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும்பணியில் தீவிரமாகஈடுபட்டு வருகின்றனர்.
