தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எம்.எல்.ஏ. ரொம்ப பிஸி...: பல்லடம் அலுவலக பதிலால் கடும் அதிருப்தியில் பொதுமக்கள்

எம்.எல்.ஏ. ரொம்ப பிஸி...: பல்லடம் அலுவலக பதிலால் கடும் அதிருப்தியில் பொதுமக்கள்

எம்.எல்.ஏ. ரொம்ப பிஸி...: பல்லடம் அலுவலக பதிலால் கடும் அதிருப்தியில் பொதுமக்கள்


UPDATED : செப் 13, 2026 08:26 PM

ADDED : செப் 13, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2026 08:26 PM ADDED : செப் 13, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:

பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் கிராம மக்கள் கூறியதாவது:

காட்டூர் கிராமத்தில் இருந்து, ஏராளமான பள்ளி குழந்தைகள், தினமும் காலை காட்டூர் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ், 22 மற்றும், 22 /41 ஆகியன, பொங்கலுாரில் இருந்து காட்டூர், காட்டூர் புதுார் வழியாக சின்ன காட்டூர் வரை செல்கின்றன. ஆனால், காட்டூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வழியாக செல்லாமல், நேராக சின்னக்காட்டூர் சென்று திரும்பி விடுகிறது.

இதனால், 2 கி.மீ., துாரத்தில் உள்ள இந்திரா காலனிக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதியை நீட்டிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரும் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, இது குறித்த நடவடிக்கை தொடர்பாக அறிந்து கொள்ள, பல்லடம் எம்.எல்.ஏ., ஆபீசை தொடர்பு கொண்ட போது, 'எம்.எல்.ஏ., பிஸியாக உள்ளார். அதனால், துவக்கி வைக்க நேரம் கிடைக்கவில்லை,' என்றனர்.

பள்ளி குழந்தைகள் தினசரி சிரமப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ., ரொம்ப பிஸி என்று கூறுவது அதிருப்தியை அளிக்கிறது. உடனடியாக, பஸ் வசதியை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us