தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ் வசதி நீட்டிப்பு என்னாச்சு? 'மவுனம்' காக்கும் எம்.எல்.ஏ. விவசாய சங்கம் 'காட்டம்' 

பஸ் வசதி நீட்டிப்பு என்னாச்சு? 'மவுனம்' காக்கும் எம்.எல்.ஏ. விவசாய சங்கம் 'காட்டம்' 

பஸ் வசதி நீட்டிப்பு என்னாச்சு? 'மவுனம்' காக்கும் எம்.எல்.ஏ. விவசாய சங்கம் 'காட்டம்' 


UPDATED : செப் 19, 2026 07:48 PM

ADDED : செப் 19, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 07:48 PM ADDED : செப் 19, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் அருகே உள்ள காட்டூர் புதுார், சின்னக்காட்டூர், இந்திரா காலனி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பொங்கலுாரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் (22 மற்றும் 22/41) பள்ளி வழியாக செல்லாமல், சின்னக்காட்டூர் வரை மட்டுமே சென்று திரும்புகின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்களை பள்ளி வழியாக இந்திரா காலனி வரை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக கடந்த 31-ம் தேதி நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் வசதி செய்து தருமாறு, அரசுப் போக்குவரத்துக் கழக பல்லடம் கிளை மேலாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை பஸ் சேவை துவங்கவில்லை.

இது குறித்து ரமேஷ் கூறுகையில், “பஸ் இயக்க போக்குவரத்துக் கழகம் தயாராக இருந்தாலும், புதிய வழித்தடத்தை தொடங்குவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வை பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை.

இன்னும் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கான பஸ் சேவை தொடங்கப்படாவிட்டால், பள்ளி மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து எம்.எல்.ஏ.வின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us