ADDED : ஏப் 25, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், 30 நாள் இலவச மொபைல் போன் சர்வீஸ் பயிற்சி வகுப்பு நாளை (27ம் தேதி) தொடங்குகிறது. எழுதப் படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம்.
பயிற்சியின் போது தங்குமிடம் மற்றும் உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், நிறைவில் மத்திய அரசின் சான்றிதழும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 94890 43923, 99525 18441 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
