ADDED : ஜூலை 20, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தனியார் தொலை தொடர்பு நிறுவனம் சார்பில், மண்ணரை பகுதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டது. அந்நிறுவனம், 2018ல் மூடப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக, டவர் இருந்த பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது, டவர், ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் காணாமல் போயிருந்தது.
தனியார் தொலை தொடர்பு நிறுவன பிரதிநிதி செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.