ADDED : ஏப் 21, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி ஓட்டுச்சாவடிகள், ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை தொகுதியில் ருத்ரப்பநகர் நகராட்சி பள்ளியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வாக்காளர்களுக்கு தேவையான இருக்கை வசதி, குடிநீர், சாய்வு தளம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, வாழை தோரணம் என அலங்கரிக்கப்பட்டு, மாடல் பூத் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
