ADDED : ஆக 21, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.
இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு, 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காதொலி கருவி வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கலெக்டர் மணீஷ் நாரணவரே உதவி உபகரணங்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.