ADDED : ஏப் 26, 2025 11:38 PM
திருப்பூர்: ''ஒரு கதை என்பதும், அதை படிப்பது, கேட்பது என்பதும், மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்'' என்கிறார், திருப்பூர் மஸ்ஜித் சேவைக்குழு தலைவர் டாக்டர். நஸிர்தீன்.
''எங்களது அமைப்பு ஜாதி, மதம், இனம், மொழி என, எவ்வித பாகுபாடுமின்றி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்களுக்கு செய்து வருகிறது. தொடர்ச்சியாக, இணைய வழியில், அறம் சார்ந்த கதை சொல்லும் போட்டிகளை நடத்தி வருகிறது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எந்தவொரு தலைப்பிலும் ஒரு கதையை உருவாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்து, எங்களுக்கு அனுப்பி வைத்தால், 'யூ டியூப்' சேனல் வழியாக வெளியிடுகிறோம். பார்வையாளர்களின் வரவேற்பை பொறுத்து, அந்த கதை சொல்லிகளுக்கு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்; அதிக 'லைக்' பெறுவோருக்கு பரிசும் கிடைக்கும்'' என்கிறார் அவர்.
