/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் விழுந்த தாய், மகள் பலி
/
கிணற்றில் விழுந்த தாய், மகள் பலி
ADDED : நவ 11, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் மயிலாத்தாள், 87. இவருக்கு, மூன்று மகள்கள். நேற்று முன்தினம் இரவு தாய் மயிலாத்தாளுக்கு உணவு கொடுக்க, மூத்த மகள் புஷ்பவள்ளி நாயகி சென்றார்.
அப்போது, இயற்கை உபாதை கழிக்க, அந்த மூதாட்டியை அழைத்து சென்ற போது, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் மயிலாத்தாள் கால் தவறி விழுந்து விட்டார்.
அவரை காப்பாற்ற மகளும் கிணற்றில் குதித்தார். இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். தாராபுரம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து உடல்களை மீட்டனர். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.