ADDED : பிப் 22, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசியில் தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பேரணி நடந்தது. அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். தமிழறிஞர் சமர்பா குமரன் பேசினார். அரசு கல்லுாரி தமிழ்ப்பேராசிரியர் மணிவண்ணன், பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் சுப்பிரமணியம், அறக்கட்டளை செயலாளர் வெங்கடாசலம், அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.