ADDED : டிச 13, 2025 07:11 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தின் ஸ்ரீ சாரதா தேவி நிவாஸ் வளாகத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 174வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நேற்று அதிகாலை மங்கல ஆரத்தி, பஜனை, திருப்பாவை பாராயணம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் ஆகியவை நடந்தது. பின், சிறப்பு பூஜை, அன்னைக்கு 1008 போற்றிகள், குங்கும அர்ச்சனை ஆகியவை நடந்தன.
மாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
