புதை மின் வடம் பணி தாமதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதை மின் வடம் பணி தாமதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
UPDATED : நவ 26, 2026 08:46 PM
ADDED : நவ 26, 2026 08:46 PM

திருப்பூர்: புதை மின் வடம் அமைக்கும் பணி மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு மற்றும் ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்து கல்லாங்காடு பகுதிக்கு புதை மின் வடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திரு.வி.க. நகர், டி.எம்.ஆர். லே அவுட் வழியாக மேற்கொள்ளப்படும் இப்பணி, கடந்த இரண்டு மாதங்களாக மந்தகதியில் நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரம் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாகி விட்டது. மேலும், மண் மற்றும் ஜல்லிக் கற்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், வாகனங்கள் செல்லும்போது எழும் தூசியால் அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, புதை மின் வடம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
