/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் 'பாயும்' கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
ரோட்டில் 'பாயும்' கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ரோட்டில் 'பாயும்' கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ரோட்டில் 'பாயும்' கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜன 11, 2025 09:03 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் இருந்து, கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகர் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும், துர்நாற்றம் வீசுவதோடு. சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் ரோட்டில் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உடைப்பை சரி செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, இப்பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.