/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மவுன்ட் லிட்ரா ஜீ பள்ளி விளையாட்டு விழா
/
மவுன்ட் லிட்ரா ஜீ பள்ளி விளையாட்டு விழா
ADDED : ஆக 23, 2025 12:24 AM

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் மவுன்ட் லிட்ரா ஜீ பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
மாணவர்களுக்கு 100மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், பெற்றோர் களுக்கு கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் நடந்தன. மாணவர்கள் நான்கு குழுக்களாக அணிவகுப்பு, சிலம்பம், கராத்தே, குழுப்பாட்டு, நடனம் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மகாத்மா காந்தி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் கேரளா ஹாக்கி சங்க பொதுச்செயலர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அப்ஸர் அஹமது, மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தாளாளர் கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். செயலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.