/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலை போல் குவியும் குப்பையால் 'சிட்கோ'வில் தீ விபத்து அபாயம்
/
மலை போல் குவியும் குப்பையால் 'சிட்கோ'வில் தீ விபத்து அபாயம்
மலை போல் குவியும் குப்பையால் 'சிட்கோ'வில் தீ விபத்து அபாயம்
மலை போல் குவியும் குப்பையால் 'சிட்கோ'வில் தீ விபத்து அபாயம்
ADDED : ஜூன் 11, 2025 06:34 AM

திருப்பூர்; குவிக்கப்படும் மாநகராட்சி குப்பையால், 'சிட்கோ' தொழிற்பேட்டை வளாகத்துக்கு தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் 'சிட்கோ' வளாகம், பிரிட்ஜ்வே காலனியில் அமைந்துள்ளது. அவிநாசி ரோடு, மேம்பாலம் வழியாக வரும் ரோடு, 'சிட்கோ' வளாகத்தை தாண்டி, பேப்ரிகேஷன் ரோடு என்ற பெயரில், ஊத்துக்குளி ரோடு, கொங்குமெயின் ரோடு வரை செல்கிறது.
'சிட்கோ' வளாகத்தில், ஏராளமான நிட்டிங் நிறுவனங்கள், பனியன் துணி வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், பேப்ரிகேஷன் ரோட்டில் கொட்டி இருப்பு வைக்கப்படுகிறது.
ரோட்டோரம் நிற்கும் வாகனங்களையும் பொருட்படுத்தாமல், வாகனங்களை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாளுக்கு நாள் குப்பை மலைபோல் குவிந்து வருவது, தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் என, தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி தொழில்துறையினர் கூறுகையில், 'சிட்கோ வளாகம் அருகே குப்பை அதிக அளவு குவிக்கப்படும் போது, இரவு நேரத்தில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். கனரக வாகனங்கள் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்படும்.
குப்பை அதிகளவு கொட்டி வைத்து, அதில் தீ வைக்கும் போது, தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக குப்பையை அகற்றி, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.