/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றிக்காக 'காய்'களை நகர்த்தி சாமார்த்தியம்!
/
வெற்றிக்காக 'காய்'களை நகர்த்தி சாமார்த்தியம்!
ADDED : ஜூலை 17, 2025 10:49 PM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. சதுரங்க போட்டியில், 14 வயது பிரிவில், 321 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தெற்கு குறுமைய சதுரங்க போட்டி நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் சின்னையா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், சதுரங்க போட்டிகளை துவக்கி வைத்தனர். 11, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய நான்கு பிரிவுகளில், 188 மாணவர்கள், 133 மாணவியர்கள் என மொத்தம், 321 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
குறுமைய இணைச் செயலாளர் தமிழ்வாணி, தலைமை நடுவர் கோபிகிருஷ்ணன் தலைமையில், 15 பேர் கொண்ட உடற்கல்வி ஆசிரியர் நடுவர் குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தினர்.
வெற்றி பெற்றவர்கள்
பதினோரு வயது மாணவர் பிரிவில் முதலிடம் விசாகன் (பிரன்ட்லைன் அகாடமி), இரண்டாமிடம் சித்தேஷ் (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மண்ணரை), மூன்றாமிடம் கவுதம் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நல்லுார்) மாணவியர் பிரிவில் முதலிடம் லட்சுமிதேவி (கொங்கு மெட்ரிக்). இரண்டு மற்றும் மூன்றாமிடம் முறையே குழலி (செஞ்சுரி பவுண்டேசன்), இளமதி (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்ணரை).
பதிநான்கு வயது மாணவர் பிரிவில், பிரணவ் மித்ரன் (செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி), ரெசின் (பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி), இன்பா (வித்ய விகாசினி பள்ளி). மாணவியர் பிரிவு - நந்ததாரணி (இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி), அஜிதா (செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி), தர்ஷினி (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோல்டன்நகர்). 17 வயது மாணவர் பிரிவு சாய்சிவேஷ் (செயின்ட் ஜோசப் பள்ளி), ஸ்ரீராம் (செஞ்சுரி பவுண்டேசன்), அகமது ஷல்சபில் (செயின்ட் ஜோசப் பள்ளி). மாணவியர் பிரிவு ஓவியா (ஆக்ஸ்போர்டு மெட்ரிக்), ரிஷபா (அரசு மேல்நிலைப்பள்ளி பெருந்தொழுவு), தீபிகா (பாலபவன் குளோபல் பள்ளி).
பத்தொன்பது வயது மாணவர் பிரிவில், மிதிலேஷ் (பிரன்ட்லைன் அகாடமி). ஸ்ரேயாஸ் (பிரன்ட்லைன் அகாடமி), செல்வகுமார் (விவேகானந்தா வித்யாலயா பள்ளி). மாணவியர் பிரிவில் மதுமதி (பாலபவன் குளோபல் மெட்ரிக்). மாணவி ஹன்னாெஷரீன் (பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), கபிலயா (லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி) இருவரும் ஒரே புள்ளிகளை பெற்றதால், இருவரும் இரண்டாமிடம்.

