sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு

/

எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு

எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு

எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு


ADDED : பிப் 17, 2025 11:28 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கே.எஸ்.சி., அரசுப்பள்ளி நுாற்றாண்டு விழாவுல ஒரு ட்விஸ்ட் நடந்துச்சு, கவனீச்சிங்களா சித்ராக்கா...''

சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''விழாவுக்கு வந்திருந்த எம்.பி., சுப்பராயனும், பா.ஜ., நிர்வாகிங்களும் பரஸ்பரம் வணக்கம் தெரிவிச்சாங்களாம். ஒருசேர மேடையிலயும் அமர்ந்தாங்களாம்.

''மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசுன வீடியோவை பா.ஜ.,காரங்க ஏற்பாடு பண்ணியிருந்தாங்க... இதை அறிவிச்சவுடனே சுப்பராயன் திகைச்சுப்போய் புருவத்தை உசத்துனாராம். எம்.பி.,யைப் பார்த்து, ெஹச்.எம்., சைகை செஞ்சாராம்.

''எம்.பி.,யும் ஒப்புதல் தந்துட்டாராம். 'நான் - சுப்பராயன் - முன்னாள் எம்.பி., குப்புசாமி என மூனு பேரும், இந்த ஸ்கூல்ல படிச்சவங்க... ஒரே ஸ்கூல்ல படிச்ச மூனு பேரு எம்.பி.,யாயிருந்தது இந்த ஒரு ஸ்கூல்ல மட்டும்தான்'னு ராதாகிருஷ்ணன் பெருமையா பேசுனாராம். ஆனா, என்னமோ... தி.மு.க., - கம்யூ., கட்சிக்காரங்க ஒருவித இறுக்கத்தோடதான் இருந்தாங்களாம்.

''இந்த விழாவுல பேசுன முதன்மைக்கல்வி அலுவலர், சிவகங்கை கல்வி மாவட்டம்னு பேசத் துவங்கி, சற்று நிதானிச்ச பின்னாடி திருப்பூர் கல்வி மாவட்டம்னு திருத்திக்கிட்டாராம்...

''முதன்மைக்கல்வி அலுவலர் ஏற்கனவே சிவகங்கைல பணிபுரிஞ்சவர். அடிக்கடி நிகழ்ச்சிகள்ல மறந்துபோய் சிவகங்கைன்னு பேசிடறாராம்''

''மித்து... இதுதான் பழைய பாசம்கிறது''

கலகலத்தாள் சித்ரா.

மேயருக்கு 'டாஸ்க்'


''மித்து... சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தயாராகிட்டு வருது... திருப்பூர்ல புதுசா 2 மாவட்டங்கள் உருவாகியிருக்கு... திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு மேயர் தினேஷ்குமாரை மாவட்ட செயலாளராக்கியிருக்காங்க...

''இந்த மாவட்டத்தில அவிநாசில இருக்குற தி.மு.க.,ல மொத்தம் அஞ்சு கோஷ்டி... இதனால அவிநாசி தொகுதியில எம்.எல்.ஏ., தேர்தல்ல அவங்களால ஜெயிக்க முடியறதில்ல. மேயருக்கு வச்சிருக்கிற 'டாஸ்க்' பெரிசு... மாநகராட்சி பஞ்சாயத்தோட இனி கட்சிப்பஞ்சாயத்தும் கனமா இருக்கறதால, இனி மேயருக்கு 'தவிப்புக்காலம்' ஆரம்பிச்சுருச்சுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்களாம்''

''சித்ராக்கா... மாநகராட்சி வணிக வளாகத்துல நடிகர் கமல் கட்சியோட நிர்வாகி 'வாஜீ', ஒரு கடையை வாடகைக்குப் பிடிச்சி இருந்தாராம்.

''இங்கதான், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்லாம் நடத்துவாங்களாம்.

''பூட்டியே கிடந்துச்சு. ஒரு வருஷத்துக்கு மேல வாடகை பாக்கின்றதால, மாநகராட்சி ஆபீசர்ஸ் 'சீல்' வைக்க வந்தாங்களாம்.

''பதறியடிச்சு வந்த கமல் கட்சி நிர்வாகி ரெண்டு நாள்ல முழு தொகையையும் செலுத்திட்டாராம்''

மித்து புன்னகைத்தாள்.

''மித்து... லிங்கேஸ்வரர் ஊர் பக்கத்துல இருக்கிற 'குரும்ப' கிராமத்துல தாமரை கட்சியை சேர்ந்த 'கேசன்-முரு'ங்கறவர் அப்பகுதியில கால் இழந்தவருக்கு செயற்கைக்கால் வாங்கித்தர்றதா சொல்லி, 14 ஆயிரம் ரூபா வாங்கினாராம்.

''ஆனா செயற்கைக்கால் வாங்கித்தரலையாம். இதுல என்ன கொடுமைன்னா, செயற்கைக்கால் முற்றிலும் இலவசம்தானாம்.

''புகார் மாவட்ட தலைமைக்கும், மாநில தலைமைக்கும் போயிருக்கு... ஆனா, அந்த நபர், மாநில, மாவட்ட நிர்வாகிகளோட நெருக்கமா இருக்காருங்கறாங்க...

''என்ன நடக்குதுன்னு பார்க்கத்தானே போறோம்''

கட்டியாச்சு 'கப்பம்'


''சித்ராக்கா... அவிநாசில தைப்பூசம், வள்ளலார் தினத்தப்ப அவிநாசி பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகிலேயே சிக்கன் கடைகள் அடைக்கப்படலையாம். இதுல ஒரு கடைல மட்டும் வருஷம்பூரா தடை செய்யப்படற நாள்ல எல்லாம் வியாபாரம் நடக்குது.

''பேரூராட்சி ஆபீசர்ைஸ சிறப்பா கவனிப்பாங்க போல... திருப்பூர் சிட்டிலயும் இதேபோலதான்... பல இடங்கள்லயும் கடை திறந்திருந்துச்சாம்''

''மித்து... அவிநாசி பகுதில டாஸ்மாக் கடையையொட்டி நடந்த பார்களோட லைசென்ஸ் காலாவதியானதால 'சீல்' வச்சாங்க...

''ஆனா, அந்த இடத்திலயே மினி பெட்டிக்கடை மாதிரி சட்டவிரோதமா மது பாட்டில், ஸ்னாக்ஸ், வாட்டர் பாட்டில்னு விக்கிறாங்களாம்.

''இதுக்காக தேவையானவங்களுக்கு ஏற்கனவே கப்பம் கட்டீட்டாங்களாம்...''

''இது தெரிஞ்ச விஷயம்தானே''

சித்ரா தலையசைத்தாள்.

அத்துமீறும் கிளப்


''மித்து... பல்லடம் - திருப்பூர், டி.கே.டி., பஸ் ஸ்டாப் பக்கம், 'ஸ்போர்ட்ஸ் கிளப்'ங்கற பேர்ல மூனு நம்பர் லாட்டரி, சூதாட்டம்னு எல்லாமே துாள் கிளப்புதாம். அரசியல்வாதிங்க, பெரிய ஆளுங்க, போலீசோட 'சப்போர்ட்'டோடதான் நடக்குதாம்.

''இத்தனைக்கும் இது வீரபாண்டி போலீஸ் செக்போஸ்டுக்குப் பக்கத்துலதான் இருக்குது''

''சித்ராக்கா... பல்லடம் வியாபாரி ஒருத்தர்ட்ட முந்திரி பருப்பு வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செஞ்ச நபர், ஜாமின்ல வந்துட்டாரு... ஆனா ஸ்டேஷனுக்கு வந்து ரெண்டு வாரமா கையெழுத்து போடறதில்லையாம். போலீஸ் கண்டுக்கல. அந்த மோசடி நபர் ஜாலியா வெளிய சுத்திட்டுத்தான் இருக்காரு. பொருளையும் பணத்தையும் இழந்த வியாபாரிதான் பாவம். ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்குமா அலையறாரு...''

விவசாயிகள் தவிப்பு


''மித்து... மத்திய அரசு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குதில்ல... இதுக்கான முகாம் கடந்த வாரம் எல்லா இடத்திலயும் நடந்துச்சு...

''இதுக்குப் பதிவு செய்றப்ப, இ சேவை மையங்கள்ல மூனு தடவை 'ஓடிபி' வரும்.

அப்புறம்தான் பதிவு முழுமை பெறும்.

''ஆனா, பெரும்பாலான மையங்கள்ல 'ஓடிபி' பெறுவதில் தாமதம் ஏற்படுதாம். புகார் கூறியும் நடவடிக்கை இல்லையாம். நெட்வொர்க் அவ்ளோ 'ஸ்லோ'வாம்.

''மத்திய அரசு திட்டம் தானேன்னு மாநில அரசு ஊழியர்கள் இதைப் பெரிசா கண்டுக்கலையாம்.

''இதனால விவசாயிகள் அதிருப்தியோட இருக்காங்க...''

''சித்ராக்கா... கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் குறிப்பிட்ட கால இடைவெளில நடக்குது... இதை கால்நடை பராமரிப்பு துறை அக்கறையோட நடத்துறதில்லைன்னு விவசாயிகள் சொல்றாங்க.

''சில ஊராட்சிகளை விட்டுட்டு முகாம் நடத்துறாங்களாம். கால்நடை துறையை அணுகினால், மருந்து குறைவா இருக்குறதால சில பகுதிகள் விடுபட்டுருச்சுன்னு சொல்றாங்களாம்''

மித்ரா ஆதங்கத்துடன் சொன்னாள்.

'ஒருமை' போலீஸ்


''மித்து... தெற்கு போலீஸ்காரங்க, ஸ்டேஷனுக்கு வர்றவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிறாங்களாம். ஒருமைலதான் பேசறாங்களாம்.

''சென்ட்ரில ஆரம்பிச்சு எல்லாருமே இப்படித்தான் இருக்காங்களாம். கமிஷனர் சார் சாட்டையச் சுழற்றுனார்னாதான் எல்லாம் சரியாகும்னு நெனைக்கிறேன்''

''சித்ராக்கா... ஆளும்கட்சிக்காரங்க சிலர், மாநகர்ல ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் தங்களோட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்றாங்க.

''இதெல்லாம் கமிஷனர் காதுக்கு எட்டவே விடாம பார்த்துக்கறாங்களாம். அதிகாரி உஷாரா இல்லேன்னா என்ன வேணாம் நடக்கும் போல...''

ஊராட்சி 'கூட்டணி'


''மித்து... ஊராட்சித் தலைவரா இருந்தவங்க பதவி போன பின்பும், பழக்கமான பி.டி.ஓ.,க்களோட 'டை-அப்' வச்சிருக்காங்களாம்.

''எந்த வேலையா இருந்தாலும் சரி, 15 சதவீதம் கமிஷன் வேணும்னு, ஊராட்சி செயலர்கள்ட்ட கறாரா கேட்கறாங்களாம்.

''சாதாரண பைப் உடைப்பை சரிசெய்யும் வேலைக்கான 'பில்'லா இருந்தாலும், கமிஷன் கட்டாயம்னு மிரட்டுறாங்களாம்.

''ஊராட்சி செயலர்களும் வேற ஊராட்சிக்கு மாத்துனா பழகவே நாளாயிடும். பேசாம இப்படியே ஓட்டலாம்னு, பழைய தலைவர்கள் - அதிகாரிகளோட 'கூட்டணி'யா செயல்பட ஆரம்பிச்சுட்டாங்களாம்''

''கிராம நிர்வாகம் சூப்பரா நடக்கும் போலயேக்கா''

கிண்டலாகக் கேட்டாள் மித்ரா.

''மித்து... திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் அருகே, ஜெய்வாபாய் ஸ்கூல் ரோட்டுல ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... ஸ்டேஷன் செல்லும் சாலைல பகல்ல 'குடி'மகன்கள் மது குடிக்கிறாங்க... போலீஸ் கண்டுக்கறதில்ல... பள்ளி முடிஞ்சு புஷ்பா தியேட்டர் ஸ்டாப் நடந்துசெல்ற மாணவியருக்கு தர்மசங்கடமா இருக்கு...''

''சித்ராக்கா... மாநகராட்சி 43வது வார்டுல மின் கம்பிகள்ல உரசுற மரக்கிளைகளை வெட்றதா சொல்லி, நடுப்பகுதியை விட்டுட்டு முழுமையா மரங்களை வெட்டி வேனில் கொண்டுபோய்ட்டாங்க... கேட்டா வார்டு கவுன்சிலர்தான் அப்படிச்சொன்னார்னு வேன்ல வந்தவங்க சொன்னாங்களாம்''

''எல்லாத்துக்குமே கவுன்சிலர் பேரச் சொல்லி இப்ப எல்லாம் கம்பி நீட்டிடறாங்க... உண்மை என்னங்கறதுதான் முக்கியம்''

''மித்து... நீதானே புலனாய்வுப்புலி... கண்டுபிடியேன் பார்ப்போம்''

இருவரின் சிரிப்புச்சத்தமும் அடங்க நீண்ட நேரமானது.






      Dinamalar
      Follow us