/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,
/
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி.,
ADDED : மார் 08, 2024 12:33 PM
அவிநாசி;அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்.பி., ராஜா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அவிநாசி ஒன்றியம், பேரூராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் பாப்பீஸ் ஓட்டலில் நடந்தது. இதில், அதிகாரிகளுடன் நீலகிரி எம்.பி., ராஜா கலந்துரையாடினார்.
அதன்பின், திருமுருகன்பூண்டி, அவிநாசி நகர் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வளர்ச்சி பணி களுக்கு அடிக்கல் நாட்டி, எம்.பி., ராஜா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, நகர செயலாளர் வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

