/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நலத்திட்ட வளர்ச்சிப்பணி எம்.பி., ராஜா துவக்கினார்
/
நலத்திட்ட வளர்ச்சிப்பணி எம்.பி., ராஜா துவக்கினார்
ADDED : ஏப் 30, 2025 12:46 AM

அவிநாசி, ; அவிநாசி வட்டாரத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை நீலகிரி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார்.
சின்னேரிபாளையம், கருவலுார், புலிப்பார், உப்பிலிபாளையம், தண்டுக்காரன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, 2 கோடியே 19 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவிநாசி நகராட்சி, 14வது வார்டில், முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, தேரோடும் நான்கு ரத வீதிகளில் மேல்நிலை மின் பாதைகளை மின் புதை வடங்களாக மாற்றி அமைத்து மின் வினியோகத்தை ஒரு கோடியே 27 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் துவக்கி வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்குடையை எம்.பி, ராஜா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அவிநாசி சட்டசபை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் கோகுல்கிருபா ஷங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் தினேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பால்ராஜ், நகர செயலாளர் வசந்தகுமார், மாவட்ட அமைப்பாளர் தொழிலாளர் அணி அவிநாசியப்பன், நகராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

