தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்

திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்

திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்


UPDATED : அக் 12, 2026 07:47 PM

ADDED : அக் 12, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:47 PM ADDED : அக் 12, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வட்டார, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வட்டார அளவிலான கோகோ போட்டியில் முதலிடம் பெற்ற 14, 17 வயது பிரிவு மாணவர்கள் மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். 17 வயது பிரிவு மாணவிகள் கைப்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றனர். 14 வயது பிரிவு மாணவிகள் கைப்பந்து, எறிபந்து போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்தனர். முதல்வர் கோப்பைக்கான மாவட்ட கோகோ போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர்.

சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த தடகளப் போட்டியில் சக்தி 3,000, 1,500 மீட்டர் ஓட்டங்களில் முதலிடம் பெற்றார். தனஸ்ரீ 1,500 மீட்டரில் மூன்றாம் இடமும், 800 மீட்டரில் இரண்டாம் இடமும் பிடித்தார். அஸ்மிஹரா 800 மீட்டரில் மூன்றாம் இடமும், தடியூன்றித் தாண்டுதலில் தர்ஷனா, ரேணுகா இரண்டாம் இடமும் பெற்றனர். தடைத்தாண்டுதலில் விஷாகா மூன்றாம் இடம் பிடித்தார்.

4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சக்தி, ஜீவா ஸ்ரீ, தர்ஷனா, ஸ்ரீ தர்ஷினி அணி முதலிடமும், 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தனஸ்ரீ, அஸ்மிஹரா, விஷாகா, ஸ்ரீ தர்ஷினி அணி இரண்டாம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

விளையாட்டுப்போட்டிகளில் வென்று சாதித்த திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருடன் பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் உள்ளிட்டோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us