எம்.எஸ்.நகர் விகாஸ் வித்யாலயா 10ம் வகுப்பு தேர்ச்சியில் அபாரம்
எம்.எஸ்.நகர் விகாஸ் வித்யாலயா 10ம் வகுப்பு தேர்ச்சியில் அபாரம்
ADDED : மே 21, 2026 08:50 AM

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், எம்.எஸ். நகர் விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து வருகிறது.
இப்பள்ளியில், 493 மதிப்பெண் பெற்று நித்ய தர்ஷினி முதலிடம், 491 மதிப்பெண் பெற்று தரணீஷ்ரா இரண்டாமிடம், 489 மதிப்பெண் பெற்று குருபரன், கனிஷ்கா இருவரும் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். கணிதத்தில் தரணீஷ், அறிவியலில் நித்யதர்ஷினி, தரணீஷ், கனிஷ்கா, காவியா, பிரனேஷ், பிரணவ், வைஷ்ணவ், பவேஷ் ஆகிய எட்டு பேரும், சமூக அறிவியலில், நித்ய தர்ஷினி, தரணீஷ், குருபரன் ஆகிய 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 33 மாணவர்களில், 23 பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 450க்குள் 10 பேரும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளி செயலாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தினர். இப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
