ADDED : அக் 28, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் அருகே நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பலகார சீட்டு நடத்தி வந்தனர். 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு, பலகார சீட்டு பணம் கிடைக்கும் என்று காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். பல்லடம் போலீசார், சீட்டு நடத்திய உரிமையாளரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை தர வேண்டும் என, பொதுமக்கள் முன்னிலையில் சீட்டு நடத்தியவர்களிடம் போலீசார் எழுதி வாங்கினர்.
சிலர் மட்டும் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானோர், பதில் எதுவும் கூறாமல் புலம்பியபடி சென்றனர்.

