/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டி நகராட்சியில் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கலெக்டரிடம் மா.கம்யூ., குற்றச்சாட்டு
/
பூண்டி நகராட்சியில் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கலெக்டரிடம் மா.கம்யூ., குற்றச்சாட்டு
பூண்டி நகராட்சியில் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கலெக்டரிடம் மா.கம்யூ., குற்றச்சாட்டு
பூண்டி நகராட்சியில் கவுன்சிலர் கணவர்கள் தலையீடு கலெக்டரிடம் மா.கம்யூ., குற்றச்சாட்டு
ADDED : மே 13, 2025 12:36 AM

திருப்பூர், ;திருமுருகன்பூண்டி நகராட்சியில், துணை தலைவரின் கணவர் மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாக, மா.கம்யூ., கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் மற்றும் துணை கலெக்டர்கள் மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு: பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு, தினசரி மார்க்கெட் வியாபாரிகள், 500க்கும் அதிகமானோர் கடை நடத்தி வருகின்றனர். என்.ஜி.ஆர்., ரோட்டை மறைத்து, ரோட்டின் மத்தியில் மேடை அமைத்து, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் வருவதை தடுப்பதால், வியாபாரம் பாதிக்கிறது. எனவே, அரசியல் கட்சி கூட்டங்களை, என்.ஜி.ஆர்., ரோட்டில் நடத்த தடை விதிக்க வேண்டும்.
திருமுருகன்பூண்டி நகராட்சி மா.கம்யூ., கிளை செயலாளர்கள்: நகராட்சியின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி பணிகள் துரித கதியில் நடக்க, நிரந்தரமாக கமிஷனர்மற்றும் செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும். துணை தலைவரின் கணவர் மற்றும் பெண் கவுன்சிலர்களின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான நிர்வாகம் நடக்க வேண்டும்.
தெருநாய் தொல்லை
நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம்: பொதுமக்கள், தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றி, நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டும். நகர்நல அலுவலரிடம் தெருநாய் தொல்லை தொடர்பான மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை; அவர் மீது துறைரீதியானநடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணபதிபாளையம் - கள்ளிமேடு உதயம் நகர் மக்கள்: எவ்வித அனுமதியும் பெறாமல், காளியம்மன் பீடம் என்ற பெயரில், கட்டடம் கட்டும் மக்களை அச்சுறுத்தும் வகையில், சிலர் செயல்பட்டு வருகின்றனர். மண்டையோடு வைத்து பூஜை செய்வது, பலி கொடுப்பது என, மக்களை அச்சுறுத்தும் வகையில் பூஜைகள் நடக்கின்றன. கோர்ட் உத்தரவுப்படி, சிலைகளை ஏழு நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும்.
தாராபுரம், பெரமியம், எருக்கலாங்காட்டுப்புதுார் மக்கள்: தாராபுரம், சங்கராண்டாம்பாளையம் கிராமம், அமராவதி ஆற்றில் இருந்து, மூலனுார் உள்வட்டம், பெரமியம் கிராமம், துாரம்பாடி கிராமம் வரை, அரசு நிலத்தின் வழியே, எவ்வித அனு மதியும் பெறாமல், தனியார் சிலர் பைப் பதித்துள்ளார்; மக்கள் பாதிக்கப்படுகின்றனர். துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை
த.வெ.க., மற்றும் 47வது வார்டு மக்கள்: லட்சுமி நகர் பகுதியில், பாதாள சாக்கடை வசதியில்லாமல், மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம். முதலில் தார்ரோடு அமைக்கலாம். அதன்பின், பாதாள சாக்கடை அமைக்கலாம் என்கின்றனர். வீண் செலவை தவிர்க்க முதலில் பாதாள சாக்கடை பணியை செய்து, பிறகு ரோடு பணியை மேற்கொள்ள வேண்டும்.
தி.மு.க., தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ரவி: திருப்பூர் வடக்கு தாலுகா, மாநகராட்சி அவிநாசி ரோடு, காந்திநகர் சிக்னல் பகுதியில், ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். குறிப்பாக, ரோட்டை ஆக்கிரமித்து கடை நடத்துவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; இனியாவது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.