/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நினைவு அரங்கம் திறக்க மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
நினைவு அரங்கம் திறக்க மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 26, 2025 11:06 PM

உடுமலை,; உடுமலை திருமூர்த்திமலை எத்தலப்பர் அரங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மா.கம்யூ., கட்சியின் உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், உடுமலை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், திருமூர்த்திமலையில், சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் எத்தலப்பர் பெயரில் கட்டப்பட்ட அரங்கம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. அரங்கத்தை உடனடியாக திறந்து, குறைந்த வாடகை நிர்ணயித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். மின்வசதி, குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.