/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தணும்: மா.கம்யூ.,வலியுறுத்தல்
/
நகர சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தணும்: மா.கம்யூ.,வலியுறுத்தல்
நகர சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தணும்: மா.கம்யூ.,வலியுறுத்தல்
நகர சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தணும்: மா.கம்யூ.,வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2024 11:47 PM

உடுமலை : நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவு படுத்த வேண்டும் என மா.கம்யூ., கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மா.கம்யூ., உடுமலை நகர கமிட்டி மாநாடு நடந்தது. இதில்,கொழுமம் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.
ராஜேந்திரா ரோட்டிலுள்ள அண்ணா பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
உடுமலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மனமகிழ் மன்றம் செயல்படுவதைத்தடுத்து, இதனை அரசு மருத்துவமனைக்குப் பயன்படுத்த வேண்டும்.
அய்யலுமீனாட்சி நகர், யு.கே.சி., நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவு படுத்த வேண்டும்.
மத்திய பஸ் ஸ்டாண்டிலுள்ள கழிப்பிடங்களை சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், பெண்களுக்கு தனிக்கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
பெரியகோட்டை, கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளிட்டு இயற்கை நீர்வழித்தடங்களிலுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
உழவர் சந்தையில், விவசாயிகள் பெயரில் போலியாக அட்டை பெற்று கடைகள் வைத்துள்ள வியாபாரிகளை வெளியேற்றி விவசாயிகளும், பொதுமக்களுக்கும் பயன்படும் சந்தையாக மாற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நகர செயலாளராக தண்டபாணி, நகர குழு உறுப்பினர்களாக, பஞ்சலிங்கம், விஸ்வநாதன், ராஜா, வசந்தி, ஜஹாங்கீர், கருப்புச்சாமி, சித்ரா, சக்திவேல், பார்த்திபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.