ADDED : பிப் 16, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் நகராட்சி என்.ஜி.ஆர்., ரோடு வணிக வளாக கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம், கட்டண கழிப்பிட வசூல், வடுகபாளையம், பனப்பாளையம் மற்றும் மேற்கு பல்லடம் இறைச்சி கடைகள் உள்ளிட்டவற்றுக்கான ஏலம், நகராட்சி கமிஷனர் முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது. டெண்டர்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தன. விண்ணப்பித்த அனைவரும் நேற்று ஏலத்தில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு கடைகளின் எண் மற்றும் பொது ஏலத்தின் பெயரை குறிப்பிட்டு ஏலம் நடந்தது. ஏலத்தில் அதிகபட்ச தொகையை கோருவர்களுக்கு கடைகள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கமிஷனர் முடிவே இறுதியானது என்பதால், இதுகுறித்து பரிசீலனை நடந்து வருகிறது.