/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க நகராட்சி முடிவு
/
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க நகராட்சி முடிவு
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க நகராட்சி முடிவு
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க நகராட்சி முடிவு
ADDED : ஜன 12, 2024 10:48 PM
உடுமலை;உடுமலை நகராட்சியில், புதிதாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு திட்டங்களான, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, கைம்பெண் உதவி தொகை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவி தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் போது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் எண் தேவைப்படுகிறது.
கடந்த, 2003ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், நகராட்சியில், 5,354 பேர் உள்ளனர்.
இக்கணக்கெடுப்பு பணி, 20 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்டதால், தற்போதுள்ள நிலையில், புதிதாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல், அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான, விளம்பரம், நோட்டீஸ் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க கோரி, நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.