/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு ஸ்டேஷனில் நகராட்சி மனு
/
பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு ஸ்டேஷனில் நகராட்சி மனு
ADDED : செப் 04, 2025 11:55 PM
திருப்பூர்; காங்கயம் நகராட்சி சார்பில், காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டது. அதில், 'காங்கயம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்தி கொண்டு, மக்களுக்கு இடையூறாகவும், கடைகளுக்கு முன்பாக அசுத்தம் செய்து கொண்டும் உள்ளனர். இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் மனு வருகிறது.
இதை தடுக்கும் பொருட்டு, காங்கயம் பஸ் ஸ்டாண்டில் மாலை முதல் இரவு நேரங்களில் தொடர் போலீசார் கண்காணிப்பு தேவை. பெயர் விலாசம் தெரியாத நபர்களை விசாரித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் பிரச்னை ஏற்படும் போது எல்லாம், அங்கு கடை வைத்திருப்பவர்கள், பயணிகள் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.