/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி; தங்கதேர் இழுத்து நேர்த்திக்கடன்
/
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி; தங்கதேர் இழுத்து நேர்த்திக்கடன்
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி; தங்கதேர் இழுத்து நேர்த்திக்கடன்
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி; தங்கதேர் இழுத்து நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 01, 2025 11:48 PM

திருப்பூர்; மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து, அலகுமலை முருகன் கோவிலில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தங்கதேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்தது. இந்த மாநாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மாநாடு வெற்றி பெற்றதையடுத்து பலரும், ஹிந்து முன்னணியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இச்சூழலில், மாநாடு வெற்றிகரமாக நடந்தையொட்டி திருப்பூரை அடுத்துள்ள அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
முன்னதாக, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக, அனைவரும் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.