தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் பாலிடெக்னிக் கல்லுாரி :பா.ஜ. வேட்பாளர் முருகன் உறுதி

அவிநாசியில் பாலிடெக்னிக் கல்லுாரி :பா.ஜ. வேட்பாளர் முருகன் உறுதி

அவிநாசியில் பாலிடெக்னிக் கல்லுாரி :பா.ஜ. வேட்பாளர் முருகன் உறுதி


ADDED : ஏப் 09, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:''அவிநாசியில் பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்கப்படும்'' என்று பா.ஜ. வேட்பாளர் முருகன் உறுதியளித்தார்.

அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் மற்றும் பழங்கரை ஊராட்சி கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்தார்.

அவர் தனது பிரசாரத்தில் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெரும் துயரங்களை மட்டுமே அனுபவித்து வந்துள்ளனர். பொதுமக்கள் மீது மிகப்பெரிய விலைவாசி சுமையை சுமத்தினர். இனி, தாமரை மலர்ந்ததும் மக்களின் வாழ்க்கையும் மலரும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், கருணைத் தொகையாக, 10 ஆயிரம் ஒருமுறை வழங்கப்படும். குடும்ப விளக்கு திட்டத்தின், ரேஷன் கார்டுதாரருக்கு, மாதந்தோறும், 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 125 நாளாக பார்லிமென்டில், சட்டம் இயற்றி பிரதமர் உயர்த்தி உள்ளார். தற்போது, தமிழகத்தின் பழனிசாமி தலைமையில் ஆட்சி வந்தவுடன், அது, 150 நாளாக உயர்த்தப்படும்.

ஆண்டுக்கு, மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும். தாமரை இல்லாமல் இரட்டை இலை இல்லை. இரட்டை இலை இல்லாமல் தாமரை இல்லை. இப்பகுதியிலுள்ள வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்படும். அவிநாசி மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்றாண்டு பட்டய படிப்பு எனப்படும் டிப்ளமோ தொழிற்நுட்ப கல்லுாரி துவங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us