/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இசைப்பள்ளியின் தமிழிசை விழா; சங்கீத கலாநிதி பாடகர் கச்சேரி
/
இசைப்பள்ளியின் தமிழிசை விழா; சங்கீத கலாநிதி பாடகர் கச்சேரி
இசைப்பள்ளியின் தமிழிசை விழா; சங்கீத கலாநிதி பாடகர் கச்சேரி
இசைப்பள்ளியின் தமிழிசை விழா; சங்கீத கலாநிதி பாடகர் கச்சேரி
ADDED : டிச 12, 2025 07:25 AM

உடுமலை: கோவை மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி உடுமலை சார்பில், தமிழிசை விழா உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் நடந்தது.
விழாவில், உடுமலை அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணமாணிக்கம் வரவேற்றார். உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், உடுமலை தமிழிசை சங்க செயலர் சண்முகசுந்தரம், மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சங்கீத கலாநிதி பாடகர் டி.எம்., கிருஷ்ணா பேசுகையில், ''இசை அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட வட்டத்துக்குள் இசையை அடைக்க முடியாது.
மாவட்டந்தோறும் இசைப்பள்ளிகள் துவக்குவது வரவேற்புக்குரியது. பல தரப்பட்ட வாழ்வியல் சூழல்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர், இசையை கற்றுக்கொள்ள இத்தகைய பள்ளிகள், வரப்பிரசாதமாக அமைகிறது,'' என்றார்.
தொடர்ந்து அவரது இசைக்கச்சேரி நடைபெற்றது. உடுமலை இசைப்பள்ளி, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இசைப்பள்ளி வயலின் ஆசிரியர் ேஷக்தாவூத் தொகுத்து வழங்கினார். குரலிசை ஆசிரியர் சார்லஸ்குமார் நன்றி தெரிவித்தார்.

