ADDED : ஜூன் 15, 2025 04:07 AM

திருப்பூர்: தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு திருப்பூர் இசைக் கலைஞர்களின் 'இசை உறவுகள்' அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குமரன் நினைவிடம் முன்புறம், குணசேகரன் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியை பெரும்படையான் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இரங்கல் கூட்டம்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை:
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மண்டல பொறுப்பாளர் வேலுமணி பங்கேற்கவுள்ளார். இதில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.