/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவன ஆண்டு விழா
/
முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவன ஆண்டு விழா
ADDED : டிச 31, 2024 05:16 AM

திருப்பூர் : முத்துார் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நவா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சிவகிரி ஆரியா கிளினிக் டாக்டர் அனுசுயா குத்துவிளக்கேற்றினார். பள்ளி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜ், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் மதிவாணன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். முன்னாள் காவல்துறை தலைவர் பாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
சாலியங்காட்டுப்பள்ளம் கணேஷ் லட்சுமி புளூமெட்டல்ஸ் குப்புசாமி, ஆர்.பி.டெக்ஸ் பழனிசாமி ஆகியோர், பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்புத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பரிசு வழங்கினர். ஸ்ரீநவா கல்வியியல் கல்லுாரி முனைவர் தீபா, தலைமையாசிரியை பத்மப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் அசோக்குமார் நன்றி கூறினர்.