/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் 'என் முதல் சேமிப் பு' சான்றிதழ்
/
குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் 'என் முதல் சேமிப் பு' சான்றிதழ்
குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் 'என் முதல் சேமிப் பு' சான்றிதழ்
குட்டீஸூக்கு கணக்கு துவக்கினால் 'என் முதல் சேமிப் பு' சான்றிதழ்
ADDED : அக் 26, 2024 11:02 PM
குழந்தைகளின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கினால், 'என் முதல் சேமிப்பு' என்ற சான்றிதழ் வழங்கப்படுமெனதபால்துறை அறிவித்துள்ளது.
தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு துவக்கப்படும் கணக்குகளுக்கு என் முதல் சேமிப்பு என்ற சான்றிதழ் வழங்கி தபால்துறை ஊக்கப்படுத்தப்படுகிறது.
பெற்றோர் தங்கள் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கி துவங்கி பயன் பெறலாம். தபால் அலுவலகத்தில், 7.5 சதவீத வட்டியுடன் பெண்களுக்கான பிரத்யேகமான தபால் கணக்கு, 7.1 சதவீத வட்டியுடன் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான தபால் கணக்கு துவங்கலாம்.
தபால் கணக்குகளுக்கு ஏ.டி.எம்., வசதி, இன்டர்நெட் பேங்கிங் வசதி உள்ளது. தபால் சேவைகளில் பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விப ரங்களை www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.