/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் 'டார்ச் லைட்' அடித்த மர்ம ஆசாமிகள்
/
வீடுகளில் 'டார்ச் லைட்' அடித்த மர்ம ஆசாமிகள்
ADDED : ஜன 19, 2026 05:57 AM
பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு, கரையாம்புதுார் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'நள்ளிரவு நேரம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த திருடர்கள், வீடுகளின் மீது 'டார்ச் லைட்' அடித்து வீடு பூட்டப்பட்டுள்ளதா; யாராவது உள்ளார்களா என நோட்டமிட்டு சென்றனர். பண்டிகை காலங்களில், பொதுமக்கள் சொந்த ஊருக்கும், வெளியூர்களுக்கும் செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட திருடர்கள் திட்டமிட்டிருக்கலாம். அதன் காரணமாகவே, 'டார்ச் லைட்' அடித்து பார்த்துள்ளனர். இது இப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

