குப்பையில் வெடித்த மர்ம பொருள்; திருப்பூரில் பரபரப்பு
குப்பையில் வெடித்த மர்ம பொருள்; திருப்பூரில் பரபரப்பு
ADDED : மார் 06, 2026 04:45 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, கோல்டன் நகர் பகுதியில், குப்பையில் கிடந்த பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 32வது வார்டு, கோல்டன் நகர் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதி.
இங்குள்ள தங்கம்மன் கோவில் வீதியில், காலியாக உள்ள நிலத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நேற்று காலை, குப்பைக்கழிவுக்குள் இருந்த ஏதோ ஒரு பொருள், 50 அடி உயரத்துக்கு பறந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அதில், கிளம்பிய தீப்பொறி குப்பை கழிவுக்குள் விழுந்து தீப்பிடித்தது.
தகவல் அறிந்து சென்ற வடக்கு தீயணைப்பு துறையினர் குப்பையில் பரவிய தீயை அணைத்தனர். வாகனத்தில் பயன்படுத்தி துாக்கி எறியப்பட்ட உதிரி பாகத்தில், வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து, வெடித்து சிதறியுள்ளது.
அருகில், மக்கள் மற்றும் வீடுகள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
