/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
/
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
நல்லுார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா; திருவீதியுலா செல்லும் வாகனங்கள் வந்தாச்சு
ADDED : ஜூலை 01, 2025 11:53 PM

திருப்பூர்; நல்லுாரில் அருளாட்சி புரியும், அம்மையப்பராகிய, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் - விசாலாட்சியம்மன் கோவிலில், முதன்முதலாக ஆனி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக, உற்சவமூர்த்திகள் திருவீதியுலா வந்து காட்சியருள, புதிய காட்சி வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுார் விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. மிகவும் பழமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்திவாகனம், தீபஸ்தம்பம், சப்தரிஷிகள் மற்றும் சப்தகன்னிமார் சிலைகளுடன் கோவில் அமைந்துள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதியில் முதல் சிவாலயமாக இருந்த இக்கோவில், திருப்பணிகள் செய்து கும்பாபிேஷகம் நடந்தது.
புதிதாக பொறுப்பேற்ற, முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழுவினர், கோவிலில் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர். விரிவான ஆலோசனைக்கு பின், தேர் செய்யும் பணி துவங்கியது. சோமாஸ்கந்தர் பவனி வரும் தேர், விநாயகர் தேர் என, இரண்டு தேர்கள் வடிமைக்கப்பட்டு, சித்திரை மாதம் வெள்ளோட்டம் நிகழ்ச்சி, தேர்த்திருவிழா போல் நடந்தது.
முதன்முறையாகதேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், முதன்முறையாக ஆனி மாத தேர்த்திருவிழா, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா நடக்கிறது. தினமும், காலை, 10:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மன் மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்க உள்ளது. வரும், 10ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மஹா அபிேஷகத்தை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் திருத்தேர்களில் இருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அன்று மாலை, தேர்வடம் பிடித்து, தேரோட்டம் நடக்க உள்ளது.
வாகனங்கள்வந்தாச்சு
தேர்த்திருவிழாவில், கொடியேற்றம் துவங்கி தேர்த்திருவிழா வரை, உற்சவமூர்த்திகள் திருவீதியுலா செல்ல வாகனங்கள் கோவிலை வந்தடைந்துள்ளன. கொடியேற்றம் நாளில் கற்பக விருட்ச வாகனம், 5ம் தேதி சூரியபிரபை, 6ம் தேதி ராவணேஸ்வரன், 7ம் தேதி அதிகாரநந்தி, 8ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
அதனையொட்டி, மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகப்பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் விசாலாட்சியம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் என, பஞ்சமூர்த்திகளாக அருள்பாலிக்க உள்ளனர். பிரமாண்ட முகூர்த்த மேடை அமைத்து, திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, சுவாமிகள் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளனர். தேரோட்டத்துக்கு அடுத்த நாள் (11ம் தேதி) குதிரை வாகனம் ஏறி பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், 12ம் தேதி பூத வாகன காட்சியும் நடைபெற உள்ளது.
வரும், 13ம் தேதி ஸ்ரீநடராஜர், சிவகாமசுந்தரியம்மன், தனி சப்பரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, மாடவீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்; அன்றைய தினம், தம்பதியராக இருந்து அம்மையப்பரை வழிபடுவது சிறப்பு என்கின்றனர் சிவாச்சார்யார்கள்.